Vijay CM-யின் Private Secretary யார் தெரியுமா? ரசிகனிலிருந்து அரசியல் வரை Jagadish Palanisamy பயணம்!

Vijay CM-யின் Private Secretary ஆனார் Jagadish Palanisamy 18 வருட பயணத்தின் நிறைவு!

தமிழக வெற்றி கழக தலைவர் மற்றும்  தமிழக முதல்வர் விஜய்-யின் தனியார் செயலாளராக Jagadish Palanisamy நியமிக்கப்பட்டிருக்கிறார். விஜய் மே 10, 2026 அன்று முதல்வராக பதவியேற்று இரண்டே நாட்களில், அதாவது மே 12-ல், இந்த நியமனம் அரசாணையாக பிறப்பிக்கப்பட்டது. ஆனால் இந்த G.O. வெளியே தெரியாமல் இருந்தது  கடந்த ஜூன் 22 அன்று விஜய்-யின் பிறந்தநாளை முன்னிட்டு Jagadish சமூக வலைதளத்தில் பகிர்ந்த பதிவு மூலமாகவே இந்த செய்தி வெளிச்சத்திற்கு வந்தது.

ரசிகனிலிருந்து Private Secretary வரை Jagadish Palanisamy-யின் கதை!

Jagadish Palanisamy விஜய்-யின் திரையுலக காலகட்டத்திலிருந்தே கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்திற்கும் மேலாக நெருங்கிய தொடர்பு வைத்திருந்தவர். Talent management நிறுவனம் நடத்தியும், திரைப்படம் தயாரித்தும் பரிச்சயமான இவர், X-ல் பதிவிட்ட வரிகள் அனைவரையும் நெகிழ்வடையச் செய்தது — “18 ஆண்டுகளுக்கு முன்பு உங்களுடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள வரிசையில் நின்றவன். இன்று மாண்புமிகு முதலமைச்சரின் தனியார் செயலாளராக உங்கள் அருகில் நிற்கிறேன். வாழ்க்கை வட்டம் பூர்த்தியானது” என்று உணர்வு பூர்வமாக எழுதியிருந்தார்.

Jagadish Palanisamy
Jagadish Palanisamy

இதே மே 12 அன்று ஜோதிடர் Rickey Radhan Pandit Vetrivel-ஐ அரசியல் சிறப்பு அலுவலராக நியமித்த அரசாணையும் வெளியானது. ஆனால் TVK கூட்டணி கட்சிகள் உள்பட பலரும் கடுமையான விமர்சனம் தெரிவித்ததால், அந்த நியமனம் மறுநாளே ரத்து செய்யப்பட்டது. Jagadish Palanisamy நியமனம் மட்டும் நிலையாக நீடிக்கிறது.

Leave a Comment