அரசன் படத்தின் பெரிய ஷெட்யூல் wrap STR வெளியிட்ட வீடியோ வைரல்!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் அரசன் படத்தின் நீண்ட ஷெட்யூல் இறுதியாக முடிவடைந்திருக்கிறது. இந்த மகிழ்ச்சியான தகவலை STR-ஆவே X தளத்தில் பகிர்ந்துகொண்டதோடு, ஷூட்டிங் ஸ்பாட் வீடியோவையும் வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோ ரசிகர்களிடையே வேகமாக பரவி வருகிறது.

அரசன் படத்தின் டீம் யார் யார்?

சிலம்பரசன் — வெற்றிமாறன் கூட்டணி என்று அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது. “மக்கள் செல்வன்” விஜய் சேதுபதியும் இதில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அனிருத் ரவிச்சந்தர் இசை, வேல்ராஜ் ஒளிப்பதிவு, ராமர் படத்தொகுப்பு என்று முழு அணியும் தரமானவர்களே.

அரசன்
அரசன்

வடசென்னை யுனிவர்ஸில் அரசன் கதை

தனுஷ் நடித்து பெரும் வரவேற்பை பெற்ற “வடசென்னை” படத்தின் அதே யுனிவர்ஸில் இந்தப் படத்தின் கதை நடக்கிறதாம். வெற்றிமாறன் தன் சிறப்பான கதை உலகை இன்னும் விரிவுபடுத்தி வருவது ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை தருகிறது. அரசன் எப்போது வருகிறான் என்று காத்திருக்கும் ரசிகர்களுக்கு இந்த ஷெட்யூல் wrap செய்தி நிச்சயம் நல்ல அப்டேட்டாக இருக்கும்!

 

Leave a Comment