Rajamouli 90 டேக்குகள் எடுத்தும் திருப்தி இல்லை Prithviraj சொன்ன அதிர்ச்சி தகவல்!

vetri

June 25, 2026

Rajamouli-யின் perfectionism — 90 டேக்குகளும் போதவில்லை!

தெலுங்கு சினிமாவின் பிரமாண்ட இயக்குநர் Rajamouli மற்றும் மகேஷ்பாபு இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் மலையாள நடிகர் Prithviraj  சமீபத்தில் படப்பிடிப்பு அனுபவங்களை பகிர்ந்திருக்கிறார்  அது இப்போது வைரலாகி வருகிறது.

30 ஆண்டு அனுபவம் இருந்தும் முதல் வாய்ப்பு கிடைத்தவர் போல உழைக்கிறார்!

ஒரு முக்கியமான காட்சிக்காக மகேஷ்பாபு மற்றும் தன்னிடம் Rajamouli 90-க்கும் மேற்பட்ட டேக்குகள் எடுத்ததாக Prithviraj தெரிவித்துள்ளார். சிறிய தவறு கூட இல்லாமல் காட்சியை முழுமையாக பிடிக்க வேண்டும் என்ற அவரது ஆர்வம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியதாக கூறியிருக்கிறார். காலை 7 மணி படப்பிடிப்புக்காக அதிகாலை 5 மணிக்கே செட்டில் வந்துவிடும் Rajamouli, உதவி இயக்குநர்களுடன் பலமுறை ஒத்திகை செய்து பிறகே காட்சியை தொடங்குவார் என்றும் Prithviraj விளக்கியிருக்கிறார். Baahubali மற்றும் RRR மூலம் உலக அரங்கில் தமிழ், தெலுங்கு சினிமாவை கொண்டு சேர்த்த Rajamouli-யின் இந்த கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் தான் அவரது படங்களை தரமிக்கதாக மாற்றுவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Leave a Comment