Sunday, September 8, 2024
Hometamil informationaccount closing letter in tamil|

account closing letter in tamil|

வங்கி கணக்கை முடிக்க கடிதம் | account closing letter in tamil

account closing letter in tamil: நண்பர்களுக்கு வணக்கம் இந்த பதிவில் தங்களுடைய வங்கியின் சேமிப்பு கணக்கினை முடிப்பதற்கு வங்கி மேலதிகாரிக்கு எப்படி கடிதம் எழுதுவது என்று பார்க்கலாம். சிலர் பணியிட மாற்றம் காரணமாக தங்களுடைய வங்கி கணக்கை உடனடியாக முடிப்பார்கள். ஒரு சிலர் வெவ்வேறு காரணத்திற்காக சேமிப்பு கணக்கை முடிப்பார்கள். வங்கி கணக்கை முடிப்பதற்கு (bank account closing letter) வங்கியின் மேலதிகாரிக்கு எப்படி எளிமையாக கடிதம் எழுதுவது என்று பார்க்கலாம் வாங்க.

account closing letter in tamil
account closing letter in tamil

account closing letter in tamil

அனுப்புநர்

                 உங்கள் பெயர் 
                 தெரு பெயர் 
                 வசிக்கும் ஊர் 

பெறுநர்

               வங்கி மேலாளர் அவர்கள்,
               பாரத ஸ்டேட் வங்கி,
               வசிக்கும் ஊர் 

அம்மா\ஐயா

               பொருள்: வங்கி கணக்கை முடித்து வைக்க வேண்டுதல் தொடர்பாக.

வணக்கம் நான் தங்கள் வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளேன். எனது சேமிப்பு கணக்கு எண்———-. நான் சொந்த காரணங்களுக்காக தங்களது வங்கியில் சேமிப்பு கணக்கை தொடர விரும்பவில்லை. எனவே எனது வங்கி கணக்கை முடித்து வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். மேலும் எனது வங்கி கணக்கில் உள்ள பணத்தை என்னிடம் ஒப்படைக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

நாள்: —–

இடம்: வசிக்கும் ஊர் 

இப்படிக்கு,
XXX

குறிப்பு:

உங்களுக்கு வேறொரு வங்கியில் வங்கி கணக்கு இருந்தால் முடித்து வைக்க கோரிய வங்கி கணக்கில் உள்ள பணத்தை அந்த வங்கி கணக்குக்கு மாற்றுமாறு கோரிக்கை வைக்கலாம். கோரிக்கை வைக்கும் போது அந்த வங்கி கணக்கு எண் மற்றும் IFSC code போன்றவற்றை கடிதத்தில் எழுதி  காட்ட வேண்டும்.

மேலும் படிக்க :rtgs full form in tamil

read more  home business ideas in tamil
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments